Posts

ஓட்டையாண்டியாய்

கணவாய்   எல்லாம் கணவாய் போனதே விவசாயம் வீழ்ந்தே போனதே சவக்குழிகள் பல கண்டேன் என் நிலத்தில் நிலத்தை வைத்து சூதாட்டம் ஆடினர்  என்னிடம் கண் எல்லாம் கறைநீர் பணத்தை வைத்து படிக்க வைத்தேன் படித்தவன் பட்டினம் சென்று விட்டான் நானோ பட்டி காட்டில் ஒற்றை பனைமரமாய் ஓட்டையாண்டியாய் ஒன்றுக்கும் உதவாதவனை  

முயற்சி செய்தால்..

கல் கூட மலையாகும் கரும்சேரு மணல் ஆகும் காற்று கூட தென்றல் ஆகும் கடல் நீரும் மழையாகும் முயற்சி செய்தால்.. இனிய காலை வணக்கம் 

இனிய காலை வணக்கம்

மூடு பனி விலகி நிலவுடன் சூரியன் சண்டையிட்டு நிலவு தோற்று வேறு கண்டம் செல்ல இனிதே விடிந்தது காலை பொழுது இனிய காலை வணக்கம்  

இந்த IT life

மெடுக்கான உடை மெல்லிய நடை குளிரும் அறை நாசுக்கு வேலை  நகைப்பு பேச்சு பளபளக்கும் கண்ணாடி மாளிகை பட்டின வாழ்வு ..இந்த IT life  

என் தன் கருவாச்சி

அழகிய சிற்பம் அமுது போன்ற முகம் கூர்க்கத்தி  கண்கள் செங்காந்த இதழ் செவிலி கன்னம் சல்லடை வயிறு செதுக்கிய இடை சலங்கை நடை கருமேக மங்கை என் தன் கருவாச்சி ..

குடியரசு தின வாழ்த்துக்கள்

நல்லோர் கூடி வாழ நலிந்ததோர் இன்புற குழந்தைகள் விளையாட மாணவர் உடல் வழு பெற இளைஞர்கள் மனம் உறுதிபெற படித்தோர் அனைவருக்கும் வேலை கிடைத்திட்ட மங்கையர் வீடு சிறக்க முதியர்வர் ஓய்வுற நல்லதோர் தலைமை மலர்ந்திட வேண்டி #குடியரசு தின #வாழ்த்துக்கள் #HAPPY INDEPENDECE DAY

அந்த கால பெண்கள் எங்கே

அதிகாலை எழுந்து சாமந்தி பறித்து சாணம் தெளித்து அம்மி அரைத்து குழம்பு செய்து ஆட்டுக்காலில் மாவு ஆட்டி அடுப்புக்கரியில் பொங்க வைத்து ஆடு மேய்த்து வீடு வந்து சின்னம் சிறிய கதை பேசி இரவு வந்து இளைப்பாறி பழைய சாதம் பிழிந்து கண் அசரும் அந்த கால பெண்கள் எங்கே .. ஸ்விக்கி ,ஸ்மோடோ வில் ஆர்டர் செய்பவர்கள் எங்கே