Posts

Showing posts from December, 2018

வாலிபத்தில் வேண்டாம்

விடலை யாய் திரிந்த என்னை விலங்கு இட்டாய் .. வீண் பழி வேண்டாம் என்றேன் .. வாலிபத்தில் வேண்டாம் ,வயது வந்ததும் காணலாம் என்றேன் .. வீண் அடிக்கும் நேரம் எல்லாம் உன் நினைவு  என்றாய் .. வயது வந்ததும் வந்து நின்றேன் .. வரலாறு  உன்னை மன்னிக்காது என்றாய் .. வீண் பேச்சு வேண்டாம் திருமணம் என்றோ என்றேன் .. வெளிநாட்டு மாப்பிளை காத்து இருக்கிறான் என்றாய்  அந்நியம்  கசக்கும் என்றேன் அதில் தான் ஆனந்தம் என்றாய்

காதல் கசக்கிறது

விண்மீன்கள் நதியில் வாழ முடியுமோ .. நீயோ  என் நினைவில் வாழுகிறாய் .. விதை எல்லாம் மரம் ஆக முடியுமோ .. நீயோ என் கனவில் வளருகிறாய் .. வெண்பனி யாய் என் நினைவில் .. வெள்ளி மலராய் உன் உருவம் ..

வனவாசம்

வண்ணத்து பூச்சி ஒன்று கண்டேன் .. வனவாசம் ஒன்று சென்றேன் .. வாடகைக்கு வாங்கி வந்து விசுவாசமாய் வளர்த்தேன் .. வளர்ந்தது வளர்ந்ததை வாணிபமாக்க ஆசை பட்டேன் .. பட்டு எடுத்து பருத்தியில் நெய்து பத்து ரூபாய் க்கு  விற்றேன்.. பணம் வந்த பாடும் இல்லை .. பட்டு பூச்சியும்  இல்லை .. கணக்கு பார்க்க காசும் இல்லை .. கூட்டி கழிக்க நோட்டும் இல்லை .. மீண்டும் சென்றேன் கேட்டது குரல்  ..வனம்மா என்றேன் நீயும் விற்ற பாடு இல்லை .. நானும் விட்ட பாடு இல்லை  .. என்று இருக்கிறாயே .. சிறுக சேமித்து வாழவும் இல்லை .. பெருக்க எண்ணி பிழைக்கவும் இல்லை .. என்னையும் உன்னையும் அளித்து எதை நீ வாங்கி .. இன்பமாய் வாழ்வாய் என்றது.. ..