Posts

Showing posts from July, 2016
Image
காற்றை கையால் பிடிக்கும் யுக்தி கூட கத்துக்கொண்டேன் ஆனால் உன் கண்விழியை பார்க்க முடியவில்லையேடி இப்படிக்கு ஒரு தலை காதலன் 
Image
விழ விழ எழு வெட்ட வெட்ட முலை கொட்ட கொட்ட திமிரு கேட்கும் வரை கத்து திறக்கும் வரை தட்டு
Image
வக்கீலுக்கு படிக்க ஆசை பட்டேன் வாத்தியார் ஆனேன் வாய்க்கா வரப்பு சண்டையை விட குடுமி பிடி சண்டைகள் அதிகம் இங்கே கக்கும் கெட்டவார்த்தைகள் இல்லை நயவஞ்சகம் இல்லை ,சூழ்ச்சியும்  இல்லை பழைய நினைவுகள் களைந்தேன் பெற்றது ஒன்று வளர்த்தது நூறு  .. ஊதியம் குறைவு என்றாலும் உளமார பெற்றேன் இப்படிக்கு ஆசிரியர்
Image
புயலோ மழையோ நெருப்போ  பூகம்பமே வந்தாலும் உன்னை பூ போல் தாங்கிக்கொள்வேன் ...
Image
முன்னேற துடிப்பவன் மட்டுமே முயற்சி செய்து கொண்டுருப்பான்..
Image
நலமான உடல் நல்லதோர் மனைவி இவை இரண்டும் அமைந்துவிட்டால் உலகம் சொர்கமே ..
Image
                                     முற்றிலும் துறந்தவன் எவனும் இல்லை என் மகேஸ்வரன்னுக்கு ஈடு இணையே இல்லை # சர்வம் சிவமயம் 
Image
வறுமையில் வயிறு பசியும் செழுமையில் செயல்பாடும் இளமையில் மரியாதையும் முதுமையில் நாவடக்கம் அறிந்தவன் யாரோ அவனே மனிதன் --பிரவீன் குமார் 
Image
பலம் பெற்ற மனிதர்கள் பலவீனபட்ட இதயங்களை தேடுவதே வணிகம் என்று சொல்லப்படுகிறது --பிரவீன் குமார் 
Image
அப்பொழுது இப்பொழுது எப்பொழுது ஆனாலும்  அன்னை மடிமேல் துயில் உண்ட பொழுதிற்கு இடகுமா.. --பிரவீன் குமார் 
Image
நகர வீடு விருந்தாளி யை வரவேற்கும் திண்ணை தொலைத்தேன் வாழை மரம் தொலைத்தேன் மிதிவண்டி தொலைத்தேன் புற வாசல் கிணறும் இல்லை பொழுதுபோக்க பக்கத்து வீட்டுக்காரர் தெரியவில்லை தனிமையில் அயல்நாட்டு சரக்கு இனிமைக்கு இளையராஜா பாட்டு மொத்தத்தில் காவலாளியை வைத்து சிறைக்கைதி ஆனேன் --பிரவீன் குமார்

IT life

Image
IT வாழ்க்கை எதுவும் நிரந்தரமில்லை இங்கு மொபைல் இவர்களுக்கு உலகம் பால் பாக்கெட் தீர்ந்துவிட்டால் கூட பயப்படாத இவர்கள் நெட் பேக் தீர்ந்து விட்டால் உயிரே போகிவிடும் கண்ணாடி மாளிகைக்குள் இவர்கள் விடும் கண்ணீர் மற்றவர்களுக்கோ இளநீர் .. - பிரவீன் குமார்
Image
அதிர்ஷ்ட‌ம் என்ப‌து அரை நொடி வேன்டும் அவளை அட‌ய.. உழைப்பு  என்ப‌து வேன்டும் உயிர் உள்ள‌வ‌ரை அவ‌ளை காப்பாற்ற ..
Image
கண்மாய்  எல்லாம் கனவாய் போனதே .. விவசாயம் விழுந்தே போனதே..
Image
ஏய் ஏகாதிபத்தியமே ... சுழன்று அடிக்கும் மின்விசிறிகள் அல்ல நாங்கள் சுத்தமாய் வீசும் இயற்கை காற்று நாங்கள் எங்களை பாலிதீன் பையில் போட்டு அடைக்காதே.. போடுவதை எல்லாம் தின்னும் பிணம்தின்னி கழுகுகள் அல்ல நாங்கள் நல்லதை மட்டும் எடுத்து கொள்ளும் அண்ணப்பறவைகள் நாங்கள்.. பருவம் தவறி பேயும் மழை அல்ல நாங்கள் பருவம் தவறாமல் காய்க்கும் கனிகள் நாங்கள் மழைக்கு முளைக்கும் காளான்கள் அல்ல நாங்கள் மகிழ்வித்து மகிழும் மனிதர்கள் நாங்கள் உனது காலனியை எங்கள் மேல் கழுட்டாதீர் அச்ச்சாணி முறிந்து விடும் .. --பிரவீன் குமார்
Image
எது மாற்றம் உழைத்து கலைத்து மகிழ்ந்த சமூகம் அல்லவா நாம் பிறர் உழைப்பை திருடி தின்னும் சமூக மாற்றம் பத்து பிள்ளைகளை பெற்ற சமூகம் நாம் பிள்ளை பெறுவதற்கே பத்து லட்சம் செலவு செய்யும் சமூக மாற்றம் மூவாயிரம் வருடம் வாழ்ந்த சித்தர்கள் அல்லவா நாம் முப்பது வயதிலே வாழ தடுமாறும் சமூக மாற்றம் --பிரவீன் குமார்
Image
அம்மனமாய் திரிந்த காலம் எல்லாம் வரவில்லை அவளை கண்ட அரை நொடியில் பூத்ததே வெட்கம் - பிரவீன் குமார்
Image
கடனை பெற்றேன் கணிதம் கற்றேன் கணக்கு போட்டு பார்த்தேன் எதுவும் மிஞ்சவில்லை அறிவியல் கற்றேன்  அறம் துறந்தேன் ஆங்கிலம் கற்றேன் ஆணவம் பெற்றேன் தமிழை மறந்தேன் தன்னம்பிக்கை இழந்தேன் .. --பிரவீன் குமார்
Image
மனிதர்களுக்கு மரணம் உண்டு என்று தெரிந்தும் கடவுளை வணங்குவதே நம்பிக்கை உறவுக்கு பிரிவு உள்ளது என்று தெரிந்தும் பழகுவதே நம்பிக்கை நோய்க்கு பிணி இல்லை என்று தெரிந்தும் மருத்துவரை அணுகுவதும் நம்பிக்கை --பிரவீன் குமார்
Image
காசுக்கு குடிநீர் என்றால் காக்கை , குருவி எல்லாம் எங்க போகும் கழிவு நீர் குடிக்கும் மனிதர்கள் சிறுநீர் குடிக்கும் காலமும் விரைவில் வராமல் எங்கே போகும் காற்றை விற்கும் காலமும் வந்தே போகும் -- பிரவீன் குமார்
Image
தனிமை எல்லாம் கொடுமை இல்லை முதுமையில் மனைவியை இழந்து தவிப்பதே கொடுமை தளர்ந்த வயதில் தாகத்திற்கு தன்னிர் கொடுக்க யாரும் இல்லை உடல் சுருண்டு போகும் போது ஒரு வாய் சோறு ஊட்டிவிட யாரும் இல்லை -பிரவீன் குமார்
Image
கிட்டி பிள்ளை விளையாடிய காலம் எங்கே தாவணி வாசம் எங்கே தாகம் தீர்க்கும் அடிகுழாய் எங்கே ஜவ்வாது வாசம் எங்கே பனைமர காடுகள் எங்கே  பனைங்கா மண்டையன் எங்கே பட்டி எங்கே தொட்டியில் தண்ணீர் எங்கே ஓலை வீடுகள் எங்கே காலணா காசு எங்கே திருவிழா கடைகள் எங்கே கொலுசு சத்தம் எங்கே இயல்பான சிரிப்பு எங்கே நெல் மணி எங்கே மெல்லிய இசை எங்கே ... எங்கே எதை தொலைத்தோம் என்று தெரியவில்லை தேடினாலும் காப்பாற்ற யாரும் இல்லை --பிரவீன் குமார்

Confidence

Image
தன்னம்பிக்கை ... கணி கொடுத்தேன் காய் கொடுத்தேன் , நிழல் ஆவது கொடுத்தேன் இருந்தும் வெட்டினாய் கதவு ,ஜன்னல் ஆய் ஆனேன் கரையான்க்கு தீனியும் ஆனேன் மீண்டும் வெட்டினாய் அடுப்பு கரி ஆனேன் மண்ணில் போட்டு வைத்தாய் உரம் ஆனேன் .. விதை விதைத்தால் மீண்டும் செடி ஆவேன் -பிரவீன் குமார்