எது மாற்றம் உழைத்து கலைத்து மகிழ்ந்த சமூகம் அல்லவா நாம் பிறர் உழைப்பை திருடி தின்னும் சமூக மாற்றம் பத்து பிள்ளைகளை பெற்ற சமூகம் நாம் பிள்ளை பெறுவதற்கே பத்து லட்சம் செலவு செய்யும் சமூக மாற்றம் மூவாயிரம் வருடம் வாழ்ந்த சித்தர்கள் அல்லவா நாம் முப்பது வயதிலே வாழ தடுமாறும் சமூக மாற்றம் --பிரவீன் குமார்
வக்கீலுக்கு படிக்க ஆசை பட்டேன் வாத்தியார் ஆனேன் வாய்க்கா வரப்பு சண்டையை விட குடுமி பிடி சண்டைகள் அதிகம் இங்கே கக்கும் கெட்டவார்த்தைகள் இல்லை நயவஞ்சகம் இல்லை ,சூழ்ச்சியும் இல்லை பழைய நினைவுகள் களைந்தேன் பெற்றது ஒன்று வளர்த்தது நூறு .. ஊதியம் குறைவு என்றாலும் உளமார பெற்றேன் இப்படிக்கு ஆசிரியர்
Comments
Post a Comment