Posts

Showing posts from January, 2019

ஓட்டையாண்டியாய்

கணவாய்   எல்லாம் கணவாய் போனதே விவசாயம் வீழ்ந்தே போனதே சவக்குழிகள் பல கண்டேன் என் நிலத்தில் நிலத்தை வைத்து சூதாட்டம் ஆடினர்  என்னிடம் கண் எல்லாம் கறைநீர் பணத்தை வைத்து படிக்க வைத்தேன் படித்தவன் பட்டினம் சென்று விட்டான் நானோ பட்டி காட்டில் ஒற்றை பனைமரமாய் ஓட்டையாண்டியாய் ஒன்றுக்கும் உதவாதவனை  

முயற்சி செய்தால்..

கல் கூட மலையாகும் கரும்சேரு மணல் ஆகும் காற்று கூட தென்றல் ஆகும் கடல் நீரும் மழையாகும் முயற்சி செய்தால்.. இனிய காலை வணக்கம் 

இனிய காலை வணக்கம்

மூடு பனி விலகி நிலவுடன் சூரியன் சண்டையிட்டு நிலவு தோற்று வேறு கண்டம் செல்ல இனிதே விடிந்தது காலை பொழுது இனிய காலை வணக்கம்  

இந்த IT life

மெடுக்கான உடை மெல்லிய நடை குளிரும் அறை நாசுக்கு வேலை  நகைப்பு பேச்சு பளபளக்கும் கண்ணாடி மாளிகை பட்டின வாழ்வு ..இந்த IT life  

என் தன் கருவாச்சி

அழகிய சிற்பம் அமுது போன்ற முகம் கூர்க்கத்தி  கண்கள் செங்காந்த இதழ் செவிலி கன்னம் சல்லடை வயிறு செதுக்கிய இடை சலங்கை நடை கருமேக மங்கை என் தன் கருவாச்சி ..

குடியரசு தின வாழ்த்துக்கள்

நல்லோர் கூடி வாழ நலிந்ததோர் இன்புற குழந்தைகள் விளையாட மாணவர் உடல் வழு பெற இளைஞர்கள் மனம் உறுதிபெற படித்தோர் அனைவருக்கும் வேலை கிடைத்திட்ட மங்கையர் வீடு சிறக்க முதியர்வர் ஓய்வுற நல்லதோர் தலைமை மலர்ந்திட வேண்டி #குடியரசு தின #வாழ்த்துக்கள் #HAPPY INDEPENDECE DAY

அந்த கால பெண்கள் எங்கே

அதிகாலை எழுந்து சாமந்தி பறித்து சாணம் தெளித்து அம்மி அரைத்து குழம்பு செய்து ஆட்டுக்காலில் மாவு ஆட்டி அடுப்புக்கரியில் பொங்க வைத்து ஆடு மேய்த்து வீடு வந்து சின்னம் சிறிய கதை பேசி இரவு வந்து இளைப்பாறி பழைய சாதம் பிழிந்து கண் அசரும் அந்த கால பெண்கள் எங்கே .. ஸ்விக்கி ,ஸ்மோடோ வில் ஆர்டர் செய்பவர்கள் எங்கே 

கலி முத்திருச்சு

பூக்கும்  பூவில் வாசமில்லை காய்க்கும் கனியில் சுவை இல்லை குடிக்கும் நீரில் சத்து இல்லை சுவாசிக்கும் காற்றில் சுத்தம் இல்லை கன்னியர்கள் கரு தரிப்பது இல்லை காளையர்கள் வீரம் அறவே இல்லை கலப்படம் இல்லை இது கவலை கிடம் கலி முத்திருச்சு

பொங்கலோ பொங்கல்

அந்தி மலர் பூத்தாட அபிநயங்கள் சேர்ந்து ஆட ஆண்டவன் கட்டளை இணங்க அந்தோர் சூரியன் உதிர்த்து இனிதே விடிந்து இயல்பாய் சிரித்து சிற்றின்பமாய் நீராடி பேரின்பமாய் குலவையிட்டு பொங்கலோ பொங்கல் என வரவேற்போம் தை பொங்கலை ..

அடிமை

அண்டம் முதல் ஆதி வரை அடிமை தனம்  அதுவே மனிதனின் கணம் 

செல்லா காசு

தமிழும் செல்லா காசு .. அன்பும் செல்லா காசு அமுதும் செல்லா காசு .. உணர்வும் செல்லா காசு உயிரும் செல்லா காசு கண்ணீர் செல்லா காசு கற்பனை செல்லா காசு கவிதை செல்லா காசு உயிரற்ற ஒன்றின் மோகம் கொள்ளை கொண்ட வரை பொக்கிஷமாய் உயிருள்ள அனைத்தும் செல்லா காசு

உடல்

காலை சூரியனை காணு ஆறுவேளை உண்ணு நித்தம் அரைத்து தின்னு தாகம் எடுக்க குடி வேர்வை வரும் வரை வேலை செய் சாணக்கியம் அறி  சத்தியம் போற்று உன் உடம்பே உனது சொத்து நித்தம் அதை போற்று 

இப்படிக்கு உன் எதிரி

மானம் உள்ளவரை .. மரணம் தழுவும்வரை .. மண்டியிட்டு மடியும் வரை .. மண்ணை விழுங்கும் வரை .. மன்னிப்பு கிடையாது .. இப்படிக்கு உன் எதிரி 

உன்னை காக்க

கூவும் குயிலே எங்கே சென்றாய் .. பாரதியின் துயிலில் நீயம் மறைந்தாயோ .. உன்னை காக்கை அளித்து விட்டதோ .. இனிமேல் காக்கை கூட்டத்தை தேடாதே .. கரையும் மயிலே எங்கே சென்றாய் .. வானவில்லில் மறைந்தாயோ .. உன்னை இரையாக்கி தின்றது .. அந்த நஞ்சுரி நாகமோ .. மாட்டத்து புறாவே எங்கே சென்றாய் .. நெற் புற்கள் இல்லாமல் தவித்து நின்றாயோ .. உங்களை வாணிபம் ஆக்காமல் விட்டது .. எங்கள் பிழையோ .. உன்னை காக்க வழியின்றி .. விழிபிதிங்கி நிற்கிறோம் ..

முக்கனி

முக்கனியின் முதல் கனியாம் .. வெயிலில் பொழியும் அரு மலையாம் .. மாங்கல்ய நிறம் கொண்ட அருட் கொடையாம் .. இல்லம் தோரும் இனிக்கும் உந்தன் சுவையாம் .. சேலம் விட்டு சென்றது ஏனோ .. பருவம் மாறி பூ உதிர்வது ஏனோ .. மனிதன் செய்யும் சித்து விளையாட்டில் ஒன்றோ .. மனம் போல் உன்ன நீ அருள்வோயோ .. திரு முருகா ..